முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜேவிபி – விடுதலைப்புலிகள் தொடர்பில் சம்பிக்க ரணவக்க பகிரங்கம்

இலங்கையின் சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இரண்டு தரப்புக்கள் ஆயுதமேந்தி பேராடியதால் பல கலவரங்களுக்கு முகங்கொடுத்ததாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

கண்டி (Kandy) – தலதா மாளிகையில் நேற்று (04) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதந்திரத்தின் பின்னரான 77 ஆண்டுகால வரலாற்றில் பல கலவரங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தால் நாடு நிர்வகிக்கப்படல்

இந்த பௌத்த பூமியில் மக்கள் விடுதலை முன்னணியும், விடுதலைப் புலிகள் அமைப்பும் ஆயுதமேந்தி போராடின. இருப்பினும் இந்த நாட்டினதும், மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.

ஜேவிபி - விடுதலைப்புலிகள் தொடர்பில் சம்பிக்க ரணவக்க பகிரங்கம் | Jvp And Ltte Fought Armed Battles In Sri Lanka

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்தியே ஆட்சிக்கு வந்தன. அவர்களே நாட்டின் வளங்களை கொள்ளையடித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.

நாட்டின் இறையாண்மை சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கி (IMF), நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தேவைக்கேற்ப நாடு நிர்வகிக்கப்படுகிறது.

தேர்தல் காலத்தில் மாத்திரம் கொள்கைகளை வெளியிடாமல் உண்மையான கொள்கையுடன் செயற்பட வேண்டும்.

தேர்தல் காலத்தில் முன்வைக்கும் கொள்கைகள் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் பொதுச் சட்டத்துக்கு இயைவானதாக காணப்பட வேண்டும்.

ஜனாதிபதி மீதான மக்களின் நம்பிக்கை

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

ஜேவிபி - விடுதலைப்புலிகள் தொடர்பில் சம்பிக்க ரணவக்க பகிரங்கம் | Jvp And Ltte Fought Armed Battles In Sri Lanka

ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara) மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.

மாறாக மக்களை திசைத்திருப்பி விடும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது. மக்கள் அரசியலில் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என்றே குறிப்பிட வேண்டும்“ என தெரிவித்தார்

https://www.youtube.com/embed/99TH1xXQfoA

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.