முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் வரவு – செலவு வேலைத்திட்ட நடைமுறைபடுத்தல் குறித்து கலந்துரையாடல்

2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு வேலைத்திட்டங்களை
நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த கலந்துரையாடலானது, இன்று (14.02.2025) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில்
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

கலந்து கொண்டோர் 

இதன்போது, நிலத்தடி நீர் மாசடைதல், கழிவுகள் மீட்டெடுத்தல், நன்னீர் குடிநீர்
திட்டம், சந்தைப்படுத்தல் உட்கட்டமைப்பு, உள்ளூர் கடன், உற்பத்திகள், தேசிய
அபிவிருத்தி திட்டமிடல், ஒருங்கிணைந்த கிராமிய சமூக பொருளாதார கட்டமைப்பினை
வலுப்படுத்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

யாழில் வரவு - செலவு வேலைத்திட்ட நடைமுறைபடுத்தல் குறித்து கலந்துரையாடல் | Implementation Of Budget Program Held In Jaffna

மேலும், பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும், அனுமதியை பெற பிரதேச ஒருங்கிணைப்பு குழு இன்மையால் அதை
நடைமுறைப்படுத்தும் அனுமதிக்காக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில்
விடப்பட்டது.

இதன்போது அபிவிருத்திக்காக யாழ்ப்பாணத்துக்கு 56 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை
நாடாளுமன்ற உறுப்பினர்களை புறந்தள்ளி அரச அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்க மாவட்ட
ஒருங்கிணைப்பு குழு முயற்சி எடுத்ததாக கூறி கடும் எதிர்ப்பு காண்பிக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு 

இதனையடுத்து சமர்ப்பிக்கப்பட முன்மொழிவு மாற்றியமைக்கப்பட்டு மீண்டும்
சமர்பிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டது.

குறிப்பாக 2025ஆம் ஆண்டின் வரவு – செலவு திட்டத்தின் முன்னரான முன்மொழிவின்
கீழ் ஒதுக்கப்பட்ட 56 மில்லியன் நிதியை மாவட்ட செயலகம் ஊடாக கையாள்வது என்ற
முன்மொழிவு வைக்கப்பட்ட போது அதை ஏற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விவாதித்திருந்தார்.

யாழில் வரவு - செலவு வேலைத்திட்ட நடைமுறைபடுத்தல் குறித்து கலந்துரையாடல் | Implementation Of Budget Program Held In Jaffna

நிதி திட்டமிடல் பொருளாதார அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் பிரதேச
மட்டத்தில் எடுக்கப்படும் முன்மொழிவை மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு
ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுத்தல் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறிப்பாக கடந்த 77 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் அவிருத்தி
தொடர்பான திட்ட முன்மொழிவு பொறிமுறையை இம்முறை மாற்றி நடளுமன்ற உறுப்பினர்கள்
முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுகின்றன. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. குறிப்பாக கடந்த ஆட்சியில் இவ்வாறான ஒரு நிலை கொண்டு வரப்பட்டது.

இணக்கப்பாடு 

ஆனால்
அன்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக
இருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கையின்
அடிப்படையில் அன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அவர் பேசி ஓர்
இணக்கப்பாட்டுக்கு வந்ததன் அடிப்படையில் மேலதிகமாக நிதி ஒதுக்கீடு நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், இன்று அவ்வாறான ஒரு நிலை
இல்லாதுள்ளது.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்படாத இந்த சமர்ப்பிப்பை ஏற்க முடியாது. இதை மாற்றியமைத்து நாடளுமன்ற உறுப்பினர்களது முன்மொழிவுகள் உள்ளடக்கபட
வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

யாழில் வரவு - செலவு வேலைத்திட்ட நடைமுறைபடுத்தல் குறித்து கலந்துரையாடல் | Implementation Of Budget Program Held In Jaffna

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரது வலியுறுத்தலுக்கு இணங்கிய ஒருங்கிணைப்பு
குழு தலைவர் குறித்த 56 மில்லியன் நிதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைக்
கொண்ட யாழ். மாவட்டத்தில் ஒருவருக்கு 9 மில்லியன் நிதி ஒதுக்கப்படுள்ளதுடன்
அதனடிப்படையில் முன்வைக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கம்
எட்டப்பட்டது.

அதேவேளை, இக்கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற
உறுப்பினர் பொ.கஜேந்திரகுமார், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர்களாகிய வைத்தியர் வ.பவானந்தராஜா, பொ.ரஜீவன், இளங்குமரன், மேலதிக
அரசாங்க காணி அதிபர் ஸ்ரீ மோகனன், திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரகுமார்,
வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண ஆளுநரின் செயலாளர்
நந்தகோபாலன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபை
செயலாளர்கள், பதவிநிலை அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும்
கலந்து கொண்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.