வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி (Nallur Kandaswamy temple) ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான “நல்லூரன் தெற்கு வாசல் வளைவு” திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நல்லூரன் தெற்கு வாசல் வளைவு தைப்பூச நாளான இன்று (11.2.2025) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நெல்மணிகள் நிரப்பப்பட்ட பெட்டகம்
இதன்போது, கைலாசபிள்ளையார் ஆலயத்தில் இருந்து நெல்மணிகள் நிரப்பப்பட்ட பெட்டகம் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் ஏற்றி கோவில் வீதிவழியாக நல்லூரன் தெற்கு வாசல் வளைவினை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து நெல்மணிகள் நிரப்பப்பட்ட பெட்டகம் நல்லூர் ஆலயத்தினை அடைந்து
ஆலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.
மேலும், யாழ்ப்பாணத்து கந்தபுராண கலாசாரத்தை எடுத்தியம்பும் வகையில் மேற்படி
வளைவு அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







