பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாபொல உதவித் தொகை 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் மாணவர் உதவித் தொகை 4000 ரூபாவிலிருந்து 6500 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
இதற்காக 4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
https://www.youtube.com/embed/98iDCv4R6XA