குட் பேட் அக்லி
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அளவு கடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. Youtubeல் 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 24 மணி நேரத்தில் சாதனையும் படைத்தது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. டீசரை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
20 வருடமாக இசையமைப்பாளராக இருக்கிறேன், இப்படி நடந்துவிட்டது.. இமானுக்கு நடந்த அதிர்ச்சி
டிரைலர் அப்டேட்
இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் இம்மாதம் இறுதியில் வெளிவரும் என தகவல் கூறப்படுகிறது.
மேலும் இம்மாதம் இறுதியிலேயே இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கும் என்கின்றனர். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.