தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்ற தலைவர் டானியா எஸ். அபேசுந்தர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது பட்ஜெட்டில் வைப்பதற்கான சில தரவுகள் அல்ல. சில செயல்படுத்தக்கூடிய திட்டங்கள்.
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது மிகவும் நல்ல விடயம். தனியார் துறையையும் அதையே செய்யச் சொல்லும்போது அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
ரூ. 21,000 சம்பளத்தை ரூ. 27,000 ஆக உயர்த்தும் போது, அங்கேயே ரூ. 6,000 வித்தியாசம் உள்ளது. 50 – 60 மணிநேரத்திற்கு OT செய்கிறார்கள்.
நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 210 செலுத்துகிறோம். அதற்கு மட்டும், நாங்கள் சுமார் ரூ. 10,000 செலுத்துகிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை
அதனுடன் ETF, EPF மற்றும் சம்பள அதிகரிப்பு அனைத்தையும் கூட்டும்போது, சுமார் ரூ. 15,000 அதிகரிக்கிறது.
அது அடிப்படை சம்பளத்திலிருந்து அதிகரிக்கும்போது, தொழில்முனைவோராகிய எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.
எனவே, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும் சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
you may like this
https://www.youtube.com/embed/hqzBxs8A4-0