இலங்கை தமிழரசு கட்சி, சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது என சனநாயக தமிழரசு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் க.நாவலன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டணியில் இணைந்தமை தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், “சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் தமிழ் இனத்தின் அரசியல் கேள்விக்குரியாக உள்ளது. அதனை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இது வரை காணாத ஒரு பாரிய பின்னடைவை மக்கள் எமக்கு வழங்கியிருந்தார்கள். அதன் ஊடாக வடக்கு – கிழக்கில் சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடுகள் மேலோங்கியுள்ளன” என கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,