நடிகர் ஷ்யாம்
திறமைகள் இருந்தாலும் சில நடிகர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.
அப்படி சின்னத்திரையில் இருக்கும் பிரபலம் தான் ஷ்யாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் அடுத்து ஜீ தமிழின் இதயம் சீரியலில் நடித்து வந்தார்.
இடையில் நீ நான் காதல் என்ற தொடரில் சிறப்பு வேடத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தார்.
புதிய தொடர்
அவ்வப்போது 2வது நாயகன், சிறப்பு வேடம் என நடித்துவந்த ஷ்யாம் தற்போது புதிய தொடரில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
ஜீ தமிழில் Mizhirendilum என்ற தொடரின் ரீமேக் சீரியல் வரப்போகிறது என நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம், இந்த தொடரில் தான் அவர் நாயகனாக நடிக்கிறாராம்.