முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு மாவட்டத்தில் 118 வேட்புமனுக்கள் தாக்கல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 139 கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம்
செலுத்தப்பட்டுள்ள நிலையில் 118 வேட்புமனுக்களே தாக்கல் செய்யப்பட்டதாக
மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.எம்.சபீயான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம்(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

”மட்டக்களப்பு மாவட்டத்தில் – 118 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன்,
17 வேட்புமனு நிராகரிப்பும் , 101 வேட்புமனு ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.

கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில் – சர்வஜன
அதிகாரம் கட்சி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் வேட்புமனு
நிராகரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 118 வேட்புமனுக்கள் தாக்கல் | Batticaloa 139 Parties Only 118 Nominations

இதேபோன்று ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்கான வேட்புமனுவில் –
விநாயகமூர்த்தி விஜயராசா தலைமையிலான சுயேற்சைக்குழுவின் வேட்புமனு
நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்கான
வேட்புமனுவில் – ஐக்கிய மக்கள் சக்தியின் -அப்துல் பஹாத்தின்
வேட்பான்மை நிராகரிக்கப்பட்டுள்ளது.

போரதீவு பற்று பிரதேச சபைக்கான வேட்பு மனுவில் – ஐக்கிய மக்கள் சக்தியின்
வேட்புமனு நிராகரிப்பட்டுள்ளதுடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சி.ஒளிவளசுதன்
, அ.சப்தசபரி ஆகியோரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு நிராகரிப்பு

நிராகரிப்பு

மட்டக்களப்பு மாநகர சபையின் வேட்புமனுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ்,ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி ,பொதுஜன ஐக்கிய முன்னணி,
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருவரது வேட்பான்மையும்
நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் மண்முனை பற்று – ஆரையம்பதி பிரதேச சபையின்
வேட்புமனுவில் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
சோ.மகேந்திரன்  தலைமையிலான சுயேற்சைக்குழுவும்,
கி.கிஜானன், பொ.தங்கவேல், ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி, ந.சுருந்திரன் ,
கு.திவாகர், நீ.பவளக்கொடி ஆகியோரும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன்
கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச சபைக்கான வேட்புமனுவில் – வி.லவக்குமார்,
கு.விமலேந்திரன் ஆகியோரது சுயேட்சை குழுவும்,
தேசிய மக்கள் சக்தி சார்பாக – செ.விமல்ராஜின் வேட்பாண்மையும்
நிராகரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 118 வேட்புமனுக்கள் தாக்கல் | Batticaloa 139 Parties Only 118 Nominations

அத்துடன்
காத்தான்குடி நகர சபைக்கான வேட்புமனுத் தாக்கலில் – சர்வஜன அதிகாரம் கட்சியின்
வேட்பு மனு நிராகரிப்பட்டதாகவும் மண்முனை தென்மேற்கு – கொக்கட்டிச்சோலை பிரதேச
சபைக்கான வேட்புமனுவில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு
நிராகரிப்பட்டுள்ளது” குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.