நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்து இருக்கும் ஜனநாயகன் படம் தான் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் தனது நிறைவேறாத ஆசை பற்றி கூறி இருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்கிற ஆசை தான் அது.

வெற்றிமாறன்
சிறை என்ற படத்தின் விழாவில் பேசிய அவர் “ஸ்ரீதர் மற்றும் பாலு மகேந்திரா ஆகியோருக்கு பிறகு வெற்றிமாறன் தான் எனக்கு பிடித்த இயக்குனர். விஜய் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், அவரும் ஆசைப்பட்டார் என நினைக்கிறேன்” என எஸ்ஏசி கூறி இருக்கிறார்.


