குட் பேட் அக்லி
வருட ஆரம்பத்தில் அஜித் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் மகிழ்திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி இருந்தது.
ஆனால் படம் என்னவோ எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றி அடையவில்லை. பிப்ரவரியில் விடாமுயற்சி படம் வெளியாக ஏப்ரல் மாதமே அதாவது கடந்த 10ம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது.
படம் வெளியாகி 5 நாட்களாக செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
நோட்டீஸ்
இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில் ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.