முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். பல்கலை மாணவன் மீது பகிடிவதை! துணைவேந்தருக்கு விசேட கடிதம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பகிடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அம் மாணவனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும், பகிடிவதைக்கெதிராக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேறகொள்ளக் கோரியும் அம் மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவரின் தந்தையே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை

கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழ். பல்கலை மாணவன் மீது பகிடிவதை! துணைவேந்தருக்கு விசேட கடிதம் | Jaffna University Student Being Attacked

அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், முறைபாடு செய்தவரின் மகனை தலைக்கவசத்தால் தாக்கியதாகவும், இதனால் அந்த மாணவனின் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதல் காரணமாக மயக்கமடைந்த மாணவனுக்கு கட்டாயப்படுத்தி பனடோல் பருக்கிய பின்னர், தனியார் விடுதியிலிருந்து துரத்தி விட்ட பின்னர், கூகுள் வரைபட உதவியுடன் பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று அங்கிருந்து அம்பியூலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

துணைவேந்தருக்கு கடிதம்

குறித்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, 

“இது மாணவர்களின் பாதுகாப்பு குறித்து உரிய தரப்பு மீது
கேள்விகளை எழுப்புகின்றேன்.

பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இவ்வாறான நாகரிகமற்ற செயல் தண்டிக்கப்பட வேண்டும்.

பயங்கரமான கலாச்சாரம்

சக மாணவரை உடல்ரீதியாகவும்
மனதளவிலும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்த பயங்கரமான கலாச்சாரம் முற்றிலும்
ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்.

யாழ். பல்கலை மாணவன் மீது பகிடிவதை! துணைவேந்தருக்கு விசேட கடிதம் | Jaffna University Student Being Attacked

மாணவர் மீது நடக்கும் எந்தவொரு வன்முறையையும் தடுக்க உறுதியாக நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்.

உரிய அதிகாரிகள் உடனடியாக முந்திய சம்பவங்களை
விசாரித்து, குற்றவாளிகளை தக்க தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

மாணவர்களை சித்திரவதை செய்யும் மரபு இனி எதுவும் நடக்கக்கூடாது.

சக
மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கீழ்த்தரமான செயல்களை ஒழிக்க
தேவையான கடுமையான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும்”  என
குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக தகவல் – கஜி

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.