அமெரிக்காவில் (US) திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
கலிஃபோர்னியா (California) மாகாணத்தில் சான் டியாகோ (San diego) உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரிக்டர் அளவில் 5.2 என இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன், சான் டியாகோவிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் இருக்கும் பகுதியான ஜூலியன் எனும் பகுதி நிலநடுக்கத்தின் மையமாக கண்டறியப்பட்டுள்ளது.
மக்களுக்கு பாதிப்பு
இந்த நிலையில், குறித்த நிலநடுக்கத்தினால் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், 5.1 என்கிற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சாதாரணமானதாக சொல்லப்பட்டாலும் எதிர்பாரத நேரத்தில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடியவை என்று கூறப்படுகிறது.
அதனால், பழைய கட்டிடங்கள், தரமற்ற முறையில் உள்ள கட்டிடங்கள் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.