பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, டீசல் நிவாரணம் வழங்காவிட்டால், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையிலிருந்து விலக வேண்டியிருக்கும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அந்த சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருட்களின் விலை
அத்துடன் இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டுத் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெட்ரோல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது.
எனினும் ஏனைய எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளாமல் அப்படியே பேணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

