சந்தேக நபர் ஒருவர் காவலில் இருந்தபோது இறந்த சம்பவம் தொடர்பாக வெலிக்கடை காவல் நிலைய பொறுப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த பரிந்துரைகளை தேசிய காவல்துறை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக பதில் காவல்துறை மா அதிபர் இன்று (6) பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.
அத்தோடு, இந்த சம்பவத்தில் கடமைகளை புறக்கணித்ததாக கண்டறியப்பட்ட ஒரு காவல்துறை சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரையும் சேவையில் இருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள்
கடந்த முதலாம் திகதி, நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில், சம்பவம் தொடர்பாக நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக, வெலிக்கடை காவல் நிலையப் பொறுப்பதிகாரியைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான பரிந்துரைகளை பதில் காவல் துறை மா அதிபர் சமர்ப்பித்துள்ளார்.
you may like this…!
https://www.youtube.com/embed/soShpNH9r_Y

