சிறுபோக பயிர்ச்செய்கைக்கான உரம் போதுமான அளவில் கையிருப்பு உள்ளதால், உரத்தின் விலை அதிகரிப்பை அனுமதிக்க முடியாது என்று கமத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கமத்தொழில் அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
உர வகைகளின் விலை
உலக சந்தையில் தற்போதைக்கு உர வகைகளின் விலை அதிகரித்துள்ளது.

ஆயினும் இலங்கையில் சிறுபோக பயிர்ச் செய்கைக்கான உர வகைகள் முன்னதாகவே இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
யூரியா மட்டுமன்றி பொஸ்பேட் வகை உர வகைகளும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.
பொதுமக்கள்
எனவே உர வகைகளுக்கான விலை அதிகரிப்பு இப்போதைய சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது.

அவ்வாறு பரவும் தகவல்கள் வெறும் வதந்திகள் மட்டுமே. அதனை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் கமத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

