முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலை மாநகரசபையில் ஆட்சியமைக்கும் தமிழரசுக்கட்சி

திருகோணமலை மாநகர சபை, பட்டணமும் சூழலும் பிரதேச சபை, வெருகல் பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை
ஆகியவற்றில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனிப் பெரும்பான்மை கட்சியாக வெற்றி
பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) இன்று (13) நடந்த ஊடக சந்திப்பின் போது தெரிவிததார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதில் கடந்த திங்கட்கிழமை (09) ஆட்சி அமைத்துவிட்டோம். 

நான்கு வட்டாரங்களில் வெற்றி

குச்சவெளிப் பிரதேச சபையில் 2018 இல்நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு
வட்டாரங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தோம். இம்முறை நான்கு வட்டாரங்களில்
வெற்றி பெற்றுள்ளோம்.

திருகோணமலை மாநகரசபையில் ஆட்சியமைக்கும் தமிழரசுக்கட்சி | Itak Forms Govt In Several Lg Councils In Trinco

மேற்படி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அந்தந்த சபைகளில் உறுப்பினர்களைக்
கொண்டுள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திருகோணமலை மாநகர
சபையில் தமக்கு துணை மாநகர முதல்வர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள் .
தரலாம் என்று கூறியிருந்தோம்.

பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு தவிசாளர் பதவி தரவேண்டும்
எனக் கேட்டிருந்தார்கள். தரலாம் எனக் கூறியிருந்தோம்.
மூதூர் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு துணைத் தவிசாளர் பதவி தரவேண்டும் எனக்
கேட்டிருந்தார்கள். அதுவும் தரலாம் எனக் கூறியிருந்தோம்.” என தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/TpzXyp6WRYY

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.