முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவேந்த தடையா…! அமைச்சர் சந்திரசேகரின் அறிவிப்பு

போரில் மரணித்த மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவேந்த எமது அரசு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar)  அறிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி படிப்படியாக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வங்குரோத்து அரசியல்வாதிகள்   

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டைக் குட்டிச் சுவராக்கிய வங்குரோத்து அரசியல்வாதிகள் இணைந்து ஆட்சியை கலைக்கப் போவதாகக் கூக்குரல் இட்டு வருகின்றனர்.

மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவேந்த தடையா...! அமைச்சர் சந்திரசேகரின் அறிவிப்பு | Maaveerar Naal 2025 Sl Govt Message

நாட்டை 70 வருட காலத்துக்கு மேலாக சீரழித்த வரலாற்றை எமது தேசிய மக்கள் சக்தி அரசு மாற்றி அனைத்து இன மத மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு தாய் நாட்டைக் கட்டியெழுப்பி வருகிறோம்.

கடந்த காலங்களில் குடும்பமாக நாட்டைச் சூறையாடியவர்கள் துரத்
தப்பட்ட நிலையில் நேர்மையான ஓர் அரசியல் கலாசாரத்தை எமது அரசு
முன்னெடுத்து வருவதைச் சகித்துக் கொள்ள முடியாத கூட்டம் இனவாதத்தைத்
தூண்ட முனைகின்றது.

போரில் மரணித்த மாவீரர்களைத் தமிழ் மக்கள் நினைவேந்த எமது அரசு
எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை.

கடந்த காலங்களில் நினைவிடங்கள் உடைக்கப்பட்ட கொடிகள் அறுத்தெறியப்பட்ட வரலாறுகளையும் மாற்றி பூரணமாக நினைவேந்தல் உரிமையை வழங்கியது எமது அரசே.

பாதுகாப்பு அமைச்சு  

நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸhநாயக்க பாதுகாப்புத் தரப்பிடம் இருக்கின்ற மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல்களைப்
பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார்.

மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவேந்த தடையா...! அமைச்சர் சந்திரசேகரின் அறிவிப்பு | Maaveerar Naal 2025 Sl Govt Message

அதன் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் சில துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அதேபோல் வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி படிப்படியாக
இடம்பெறும்.

அதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை. 
அண்மையில் வன்னி நிலப்பரப்பில் இராணுவத்திடம் இருந்த ஒரு பகுதி காணி விக்கப்பட்ட நிலையில் அதனை உரியவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு   

எமது அரசு நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கான
தீர்வு காண்பதற்காக புதிய அரசமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தி
வருகின்றது.
அதைப் பொறுக்க முடியாத சிலர் தெற்கிலும் வடக்கிலும் இருக்கின்ற நிலையில் அவர்கள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பில்
இருக்கின்றார்கள்.

மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவேந்த தடையா...! அமைச்சர் சந்திரசேகரின் அறிவிப்பு | Maaveerar Naal 2025 Sl Govt Message

அண்மையில் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்குப் பின்னால் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் இருக்கின்றன எனத் தகவல்கள்
வெளியாகியுள்ளன.

இவர்களின் நோக்கம் மக்களை வாழ வைப்பது அல்ல. தமது அரசியல்
இருப்புக்களை தக்க வைத்துக் கொண்டு நாட்டைச் சூறையாடுவது இவர்களின் நோக்கம்.

இனங்களுக்கிடையில் முறுகல் 

இதை நான் விலாவரியாக கூற வேண்டிய தேவையில்லை. கடந்த காலங்
களில் நாட்டை எப்படி ரணில் ராஜபக்ஷக்கள் சூறையாடினார்கள் என்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும்.

மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவேந்த தடையா...! அமைச்சர் சந்திரசேகரின் அறிவிப்பு | Maaveerar Naal 2025 Sl Govt Message

ரணில், ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியமைக்க
எமது மக்கள் இடமளிக்க மாட்டார்கள்.

ஆகவே எமது அரசை வீழ்த்துவதாகக் கூறிக்கொண்டு இனங்களுக்கிடையில்
முறுகல் நிலையைத் தோற்றுவிப்பதற்கு வங்குரோத்து அரசியல்வாதிகள் பல
விதமான செயற்பாடுகளைச் செய்வார்கள்.மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.