முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் எம்.எஸ்.எம் நழீம்

ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த
எம்.எஸ்.நழீம், பிரதி தவிசாளராக ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த ஞானசேகரன்
கஜேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

17 உறுப்பினர்களை கொண்ட ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் உப தவிசாளர்களை தெரிவு
செய்யும் நிகழ்வு இன்று (16) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்
ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

திறந்த வாக்கெடுப்பு

குறித்த நகர சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் போட்டியில் ஐக்கிய தேசிய கட்சி
சார்பில் எம்.எஸ்.சமீம், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான முஹம்மட் சாலி நழீம்
போட்டியிட்டதையடுத்து திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டது

ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் எம்.எஸ்.எம் நழீம் | Chairman Of The Eravur Urban Council

இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் பிரசன்னமான நிலையில் 16
பேருடன் இந்த தவிசாளர் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

இதன்போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எம்.எஸ்.நழீமிற்கு ஆதரவாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 07 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்
கூட்டமைப்பை சேர்ந்த 01 உறுப்பினரும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த 01
உறுப்பினர் என மொத்தமாக 09 உறுப்பினர்கள் வாக்களித்னர்.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம்.எஸ்.சமீம் ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியை
சேர்ந்த 04 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 02
உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 01 உறுப்பினருமாக 07 உறுப்பினர்
வாக்களித்தனர்.

பிரதி தவிசாளர் தெரிவு

இதன் பிரகாரம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எஸ். நழீம் 02 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் எம்.எஸ்.எம் நழீம் | Chairman Of The Eravur Urban Council

அதனை தொடர்ந்து
ஏறாவூர் நகரசபையின் பிரதி தவிசாளராக போட்டியிட்ட ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை
சேர்ந்த ஞானசேகரன் கஜேந்திரன் 9 வாக்குகளும் ஜக்கிய தேசிய கட்சி சார்பில்
ஏ.எம்.எம். அன்வர் போட்டியிட்ட உறுப்பினருக்கு 7 வாக்குகளும்
அளிக்கப்பட்டதையடுத்து ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த ஞானசேகரன் கஜேந்திரன்
பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வில் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்
ஹிஸ்புல்லா, தமிழரசு கட்சி நாடாளுமன்ற  உறுப்பினர் இரா. சாணக்கியன் உட்பட கட்சி
ஆதரவாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.