முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

1992ல் வெளிவந்த தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை

தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

ரோஜா

மூத்த முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மணி ரத்னம். இவர் இயக்கத்தில் 1992ல் வெளிவந்த கல்ட் க்ளாஸிக் திரைப்படம்தான் ரோஜா. இப்படத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா, நாசர், ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். காதல் திரைப்படமாக மட்டுமின்றி முக்கிய அரசியலை பேசிய திரைப்படமாகவும் ரோஜா பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஏ.ஆர். ரஹ்மான் கிடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் போட்ட ஒவ்வொரு பாடல்களும், பின்னணி இசை இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

1992ல் வெளிவந்த தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 1992 Best Tamil Movies

கில்லி படத்தின் 200வது நாள்.. தளபதி விஜய்யுடன் ரஜினிகாந்த்! பலரும் பார்த்திராத புகைப்படம்

சின்ன கவுண்டர்

கேப்டன் விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் சிறந்த 10 திரைப்படங்களில் கண்டிப்பாக சின்ன கவுண்டர் திரைப்படமும் இடம்பெறும். இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜயகாந்துடன் இணைந்து சுகன்யா, மனோரமா, சலீம் கோஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு என பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இவருடைய இசையில் உருவான மாஸ்டர் பீஸ் ஆல்பங்களில் இதுவும் ஒன்று.

1992ல் வெளிவந்த தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 1992 Best Tamil Movies

ரிக்சா மாமா

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு திரைப்படம் ரிச்சா மாமா. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் இப்படம் உருவானது. இப்படத்தில் சத்யராஜ் உடன் இணைந்து கவுதமி, குஷ்பூ, ஸ்ரீதேவி விஜயகுமார், வெண்ணிறாடை மூர்த்தி, நாகேஷ், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 90களில் வெளிவந்த எமோஷனலான திரைப்படங்களில் ரிச்சா மாமா படமும் ஒன்றாகும். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

1992ல் வெளிவந்த தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 1992 Best Tamil Movies

அண்ணாமலை

மாஸ் திரைப்படங்களுக்கு இன்று வரை வழிகாட்டியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களில் ஒன்று அண்ணாமலை. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கே. பாலசந்தர் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்திருந்தார். மாஸ் பின்னணி இசை ஒரு பக்கம், எமோஷனல், ரொமான்டிக், மாஸ் பாடல்கள் மறுபக்கம் என இப்படத்திற்கு வெறித்தமாக இசையமைத்திருப்பார் தேவா. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ, சரத்பாபு, மனோரமா, ஜனகராஜ், ரேகா, ராதாராவி ஆகியோர் நடித்திருந்தனர்.

1992ல் வெளிவந்த தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 1992 Best Tamil Movies

அஜித் முதன் முதலில் போலீஸாக நடிக்கவிருந்த படம்.. ஆனால் கைவிடப்பட்டது! புகைப்படம் இதோ

தேவர் மகன்

கமல் ஹாசனின் திரைக்கதையில் உருவான மாஸ்டர் பீஸ் திரைப்படங்களில் முக்கியமான படம் தேவர்மகன். பரதன் இயக்கிய இப்படத்தில் சிவாஜியுடன் இணைந்து கமல் ஹாசன் நடித்திருப்பார். கம்பிரமான நடிப்பில் இப்படத்தில் சிவாஜி மிரட்டியிருந்தார். மேலும் இப்படத்தை திரைக்கதையில் கமல் ஹாசன் வடிவமைத்த விதம் சிறப்பாக இருக்கும். இளையராஜா இசையில் உருவான இப்படத்தில் கவுதமி, ரேவதி, வடிவேலு, தலைவாசல் விஜய், நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். 

1992ல் வெளிவந்த தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 1992 Best Tamil Movies

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்