செம்மணி அணையா தீப போராட்ட இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை (Karunananthan Ilankumaran) போராட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா விளக்கு போராட்டம் இறுதி நாளாக நேற்று (25) நடைபெற்றது.
குறித்த இடத்திற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வருகை தந்திருந்த நிலையில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் போராட்ட இடத்திற்கு வருகை தந்த சில அரசியல்வாதிகளை விரட்டிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனையும் மக்கள் குறித்த இடத்தை விட்டு விரட்டியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/bJebG426KaA

