முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரான் படைத்தளபதிகளின் இறுதிச் சடங்கு : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இஸ்ரேலுடனான (israel)12 நாள் மோதலின் போது கொல்லப்பட்ட இராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் உட்பட சுமார் 60 பேருக்கு ஈரானில்(iran) இன்று(28)அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

இறந்த தளபதிகளின் உருவப்படங்களைத் தாங்கிய ஈரானியக் கொடியால் மூடப்பட்ட சவப்பெட்டிகள், தெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்திற்கு அருகில் கலந்து கொண்ட மக்களால் சூழப்பட்டன.

கருப்பு உடை அணிந்து இறுதி நிகழ்வில் பங்கேற்பு

கருப்பு உடை அணிந்த ஏராளமானவர்கள் கோஷங்களை எழுப்பினர், ஈரானியக் கொடிகளை அசைத்தனர் மற்றும் கொல்லப்பட்டவர்களின் உருவப்படங்களை ஏந்திச் சென்றனர்.

இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரான் படைத்தளபதிகளின் இறுதிச் சடங்கு : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு | Iran Holds State Funeral For Military Leaders

நிகழ்வுக்கு முன்னதாக, மக்கள் பங்கேற்குமாறு ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. அதிகாரிகள் இலவச பேருந்து மற்றும் தொடருந்து பயணங்களை வழங்கினர். அரசு அலுவலகங்கள் இன்றைய தினம் மூடப்பட்டிருந்தன.

ஈரான் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மனைவி, மகளுடன் பலி 

ஈரானில் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த முகமது பகேரி அடக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர்.

இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரான் படைத்தளபதிகளின் இறுதிச் சடங்கு : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு | Iran Holds State Funeral For Military Leaders

 இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது மனைவி மற்றும் மகளுடன் பகேரி அடக்கம் செய்யப்படுவார். மொத்தத்தில், ஈரானில் 627 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலில் 28 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இறுதிச் சடங்கில் இஸ்லாமிய புரட்சிகரப் படைகளின் தலைமைத் தளபதி ஹொசைன் சலாமி, தெஹ்ரானில் உள்ள ஆசாத் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த முகமது மெஹ்தி தெஹ்ரான்சி போன்ற பல அணு விஞ்ஞானிகளும் அடங்குவர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்