குக் வித் கோமாளி
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இணைந்து செஃப் கௌஷிக் நடுவராக இணைந்துள்ளார்.

ஷபானா, பிரியராமன், சுந்தரி அக்கா, லட்சுமி ராமகிருஷ்ணன், உமைர், பிக் பாஸ் ராஜு உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் சௌந்தர்யா மற்றும் கஞ்சா கருப்பு ஆகிய இரு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வாரம் நடைபெற்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நன்றாக சமைத்து முதலிடத்தை பிடித்துள்ளார் மதுமிதா. அவரை தொடர்ந்து உமைர், நந்தகுமார், ஷபானா, பிரியராமன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகிய டாப் 6ல் இடம்பிடித்து Safe Zone-ல் உள்ளனர்.

சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ
Danger Zone
இதற்கு அடுத்த 7 மற்றும் 8வது இடத்தை பிடித்துள்ள சுந்தரி அக்கா மற்றும் ராஜு Danger Zone-ல் உள்ளனர். இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும், Danger Zone இவர்கள் இருவரும் இடம்பிடித்துள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.

இதுவே வரும் வாரங்களில் தொடர்ந்தால் இவர்கள் இருவரில் ஒருவர் எலிமினேஷன் ஆக வாய்ப்பு உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் வாரங்களில் Danger Zone-ல் இருந்து இவர்கள் தப்பித்துவிடுவார்களா என்று.

