செம்மணி விவகாரத்தை தற்போதைய அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் முடக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தாய் முதல் மூன்று மாத குழந்தை வரை தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டு கொன்று மண்ணுக்குள் புதைக்கப்பட்டனர்.
இதனைத்தான் நாங்கள் வெளியே கொண்டு வர முற்படுகின்றோம் ஆனால் இந்த அரசாங்கம் இதனை திட்டமிட்ட ரீதியில் முடக்குகின்றது.
இது குறித்து கருத்து தெரிவிக்க முற்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake), சிறீதரனை (S. Shritharan) தவிர யாரும் கதைக்க கூடாது என தெரிவிக்கின்றார்.
செம்மணியிற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினை, மக்களை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்புவதற்கு வாகனங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், நான் சென்று அவரிடம் விவரத்தை கூறிய போதுதான் மக்களை அவர் பார்வையிடக்கூடியதாக இருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/Gn2Jgu8C0BQ

