முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிள்ளையானுக்கு அடுத்த சிக்கல்! அசாத் மௌலானாவை அழைத்துவர தயாராகும் அநுர அரசாங்கம்!

முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் (பிள்ளையான்) தாக்குதல் தொடர்பில் முன்னதாக அறிந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல கருத்துக்களை வெளிப்படுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் (பிள்ளையான்) நெருங்கிய சகபாடியான ஹன்சிர் அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து விசாரிக்க தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, அசாத் மௌலானாவின் வெளிப்பாடுகளை விசாரிக்க இரண்டு குழுக்கள் முந்தயை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டதாகவும், அதன் அறிக்கைகள் கத்தோலிக்க சபையால் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அசாத் மௌலானா

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பிள்ளையானுக்கு அடுத்த சிக்கல்! அசாத் மௌலானாவை அழைத்துவர தயாராகும் அநுர அரசாங்கம்! | Ranil Trouble Due Revelations Asad Maulana

அசாத் மௌலானாவின் வெளிப்பாடுகளை விசாரிக்க நல்லாட்சி அரசாங்கத்தினால் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2023 மற்றும், 2024 ஆம் ஆண்டிலும், மௌலானாவின் வெளிப்பாடுகளை விசாரிக்க இரண்டு ரணிலால் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

நிராகரிக்கப்பட்ட அறிக்கை

இந்தக் குழுவை கத்தோலிக்க சபை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் அறிக்கை முழுமையாக நிராகரிக்கப்பட்டது.

பிள்ளையானுக்கு அடுத்த சிக்கல்! அசாத் மௌலானாவை அழைத்துவர தயாராகும் அநுர அரசாங்கம்! | Ranil Trouble Due Revelations Asad Maulana

ஆனால் தற்போது எமது அரசாங்கத்தில் இந்த விசாரணை முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்நிலையில் விசாரணையை மேற்கொள்ள பல தடைகள் காணப்படுகின்றன. அதனை சபையில் வெளிப்படுத்த விடும்பவில்லை.

மேலும், எதிர்கால விசாரணையில் தடைகள் ஏற்படும் என்ற நிலையில் இதனை பாதுகாக்கவேண்டிய தேவை உள்ளது” என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.