முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துணுக்காயில் கடமைகளைப் பொறுப்பேற்காத 40 ஆசிரியர்கள்: ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு

துணுக்காயில் இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, துணுக்காயில் 40ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசஅபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று (17) இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் பணி இடமாற்றம்

அவர் மேலும் தெரிவிக்கையில், துணுக்காய் கல்வி வலயத்தில் கடமையாற்றிய 44 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் பெற்று
வெளிவலயங்களுக்கு சேவையாற்றச் சென்றுள்ளனர்.

இதன்மூலம் துணுக்காய்
கல்விவலயத்தில் ஏற்பட்ட 44ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில் பணியாற்றிய
ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதும் நான்கு ஆசிரியர்கள்
மாத்திரமே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

துணுக்காயில் கடமைகளைப் பொறுப்பேற்காத 40 ஆசிரியர்கள்: ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு | 40 Teachers In Thunukkai Have Not Taken Up Duties

ஆசிரியர் நியமனங்கள் திறந்த
போட்டிப்பரீட்சை முறையில் இடம்பெறுவதால் தான் இத்தகைய சிக்கல் நிலைமைகள்
காணப்படுகின்றனர். எனவே இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்கள்
மேற்கொள்ளப்பட வேண்டும்.

துணுக்காய் வலயத்தில் ஏற்கனவே 160ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது.
தற்போது 40ஆசிரியர்கள் கடமைகளைப் பெறுப்பேற்காதநிலையில் துணுக்காய் வலயத்தில்
ஆசிரியர்களின் வெற்றிடங்கள் 200ஆக உயர்வடைந்திருக்கின்றது. இதனால் துணுக்காய்
வலயத்தினுடைய கற்றல் செயற்பாடுகள் இன்னும் மோசமடைவதற்கான நிலையே
ஏற்பட்டிருக்கின்றது.

ஆசிரியர் நியமனங்கள்

எமது பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும். வன்னி என்றால் ஒதுக்கி விடுக்கின்ற நிலமை,
முல்லைத்தீவு மாவட்டம் என்றால் ஒதுக்கி விடுக்கின்ற நிலமை, துணுக்காய் என்றால்
ஒதுக்கிவிடுகின்ற நிலமை இருக்கக்கூடாது. அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

துணுக்காயில் கடமைகளைப் பொறுப்பேற்காத 40 ஆசிரியர்கள்: ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு | 40 Teachers In Thunukkai Have Not Taken Up Duties

மேலும் இந்தப் பிரச்சினை தொடர்பில் கடந்த 15.07 2025அன்று இடம்பெற்ற மன்னார்,
முசலிப்பிரலி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் பேசப்பட்டது. இக்கூட்டத்திலும்
மன்னார் வலயத்திலிருந்து பல ஆசிரியர்கள் பணியிடமாற்றம்பெற்று
சென்றிருப்பதாகவும், அந்த வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களிலிருந்து ஆசிரியர்கள்
வருகைதந்து தமது கடமைகளை இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்கவில்லையெனவும் மன்னார்
வலயக்கல்விப்பணிப்பாளரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன்போது வன்னிமாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தலுக்கமைய மாவட்ட
ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளவேண்டுமென முசலி பிரதேச
அபிவிருத்திக்குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.