திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்தில் நேற்றிரவு (22)இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியாவில் இருந்து சென்ற வான் ஒன்றும் மூதூரில் இருந்து வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த விபத்தில் வான் சாரதி உட்பட முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகி கிண்ணியா தளவைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

