பிரதீப் ரங்கநாதன்
குறும்படங்கள் இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2019ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
மிகப்பெரிய ஹிட்டான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. அப்படத்திற்கு பின் லக் டுடே படம் இயக்கியதோடு அதில் நடித்தும் இருந்தார்.
கடைசியாக இவர் நடிப்பில் டிராகன் படம் வெளியானது. அந்த படமும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிரதீப், விக்னேஷ் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டியூட்’ படத்திலும் நடித்து வருகிறார். இதில், நாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார்.


சாய் அபயங்கரை ஏன் இசையமைக்க அழைக்கின்றனர்?.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்
டாப் நடிகர்
சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
அதவது, ‘டியூட்’ படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


