பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தமிழில் தற்போது விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார்.
பூஜா ஹெக்டே நடிக்கும் படங்களில் அவரின் நடன திறமைக்கு முக்கிய பங்கு வகிக்கும் வகையில் ஒரு பாடலாவது அமைந்து விடும்.
அந்த வகையில், தமிழில் அவர் விஜய்யுடன் இணைந்து நடனமாடிய அரபிக் குத்து பாடல் மிகப்பெரிய வைரலானது.
அதை தொடர்ந்து, சூர்யா உடன் பூஜா ஹெக்டே இணைந்து நடித்து வெளியான ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற ‘கனிமா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்த்தது.
அதன்படி, கடந்த சில நாட்களுக்குப் முன்பு கூலி படத்திலிருந்து வெளியான ‘மோனிகா’ பாடலில் சிறப்பு நடனம் ஆடியுள்ளார் பூஜா ஹெக்டே. இந்த பாடலில் பூஜா ஹெக்டேவின் தோற்றம், நளினம், உடை ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்தது.


சிம்பு – வெற்றிமாறன் படம் டிராப் ஆனதா?.. வெளிவந்த உண்மை தகவல்
இத்தனை லட்சமா?
இந்நிலையில், அந்தப் பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த ஆடை Versace Medusa 95 Grapped Gown வகையை சேர்ந்தது. அதன் விலை கிட்டத்தட்ட ரூ. 5 லட்சம் என தெரியவந்திருக்கின்றது.


