முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கைதை தொடர்ந்து பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் இனிய பாரதியின் கைது மிக பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் இனிய பாரதியின் கைதின் பின் அவரின் நான்கு சகாக்கள் அண்மைக் காலங்களில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இனிய பாரதியின் முக்கியமான பல குற்றச்சாட்டுக்களில் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் கதைப்பதற்கு கூட பயப்பட்டவர்கள் தற்காலத்தில் தங்களை பாதுகாப்பதற்கு ஏதோவொரு கட்சியைச்சார்ந்து இருக்கிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்…