முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்!

எல்லை நிர்ணய குழுவொன்றை மீண்டும் நியமித்தால் மாகாண சபைத் தேர்தலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் நடத்த முடியாத நிலை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் பெப்ரல் அமைப்பு 28ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தல் 

“2017 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒருசில தந்திரமான நடவடிக்கைகளினால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது.இதனை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்! | Problems In Holding Provincial Council Elections

இதன் பிரதிபலனாகவே மாகாணசபைகளின் பதவி காலத்தை குறைக்க முடியுமே தவிர அதிகரிக்க முடியாது என்று தீர்ப்பு கிடைக்கப்பெற்றது.

பாராளுமன்றத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை அப்போது எடுக்கவில்லை.

அதுவே தவறு.அறிக்கை தாமதப்படுத்தியவர்களே தவறிழைத்தார்கள். எல்லை நிர்ணய குழுவொன்றை மீண்டும் நியமித்தால் மாகாண சபைத் தேர்தலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் நடத்த முடியாத நிலை ஏற்படும்.

அரசியல்வாதிகளின் நிர்வாகம் 

அரச அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர்களின் நிர்வாகத்தை காட்டிலும் அரசியல்வாதிகளின் நிர்வாகம் நூற்றுக்கு நூறு சதவீதம் சிறந்தது.

அரசியல்வாதிகளால் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுக்க முடியும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்! | Problems In Holding Provincial Council Elections

அரச அதிகாரிகள்,ஆளுநர்களினால் இடம்பெறும் ஊழல்மோசடிகளை எவராலும் தடுக்க முடியாது.மீளாய்வு குழுவுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திலும் சிக்கல் காணப்பட்டது.தேர்தலை பிற்போடுவதற்காகவே எல்லை நிர்ணய குழு நியமிக்கப்படும்.

தேர்தலை பிற்போட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் குழுவை சவாலுக்குட்படுத்துவார்கள்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.