மட்டக்களப்பு மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் தெரிவில் நடந்த ஒரு திட்டத்தைப் பற்றி நாங்கள் குறிப்பிட வேண்டும் என சட்டத்தரணி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிட்ட 11 சபைகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக ஆட்சியமைக்கக் கூடிய 09 சபைகளிலே 06 சபைகளின் ஆட்சி அதிகாரத்தை தமிழரசுக் கட்சி பெற்றிருக்கின்றது.
அதிலே தவிசாளர் பிரதித் தவிசாளர் என இரு பதவிகளும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே கிடைத்திருக்கின்றது.
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும்
இதற்கு உதவியாக இருந்த சுயேட்சைக் குழுக்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி, மாநகரசபையில் அவர்களுடன் இணைந்து தான் நாங்கள் ஆட்சியமைத்திருக்கின்றோம் அவர்களுக்கும் நன்றிகள்.
அதே போன்று இன்னும் மூன்று சபைகள் இருக்கின்றன. அவற்றிலும் நாங்கள் முழுமையாக முயற்சியெடுத்து அந்த சபைகளின் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றுவோம்.
அதே நேரத்திலே எதிர்வரும் நாட்களில் எமது சகோதர முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் சபைகளிலே எங்களுடைய ஆதரவுடன் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அதன் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதையும் சொல்ல வேண்டும்.
குறிப்பாக இந்த ஊடக சந்திப்பைச் செய்ததன் நோக்கம். ஒட்டுமொத்த சமூகத்திற்கும் குறிப்பாக வாக்காளர்களுக்கும், ஏனைய கட்சியினருக்கும் இன்று மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் தெரிவில் நடந்த ஒரு திட்டத்தைப் பற்றி நாங்கள் சொல்ல வேண்டும்.
மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபையைப் பொறுத்த மட்டில் சபையில் உறுப்பினர் தெரிவு இலங்கைத் தமிழரசுக் கட்சி 08 ஆசனங்கள், சுயேட்சைக் குழக்கள் 02 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு 02 ஆசனங்கள், தேசிய மக்கள் சக்திக்கு 06 ஆசனங்கள் மொத்தமாக 20 ஆசனங்கள் இருக்கின்றன.
தவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவாக
அந்த வகையிலே இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு சுயேட்சைக் குழுவொன்றின் ஆதரவும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவும், எமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 08 உறுப்பினர்கள் என 10 உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கும், வெளியில் 10 உறுப்பினர்களும் இருந்தார்கள்.
இதிலே நான் முன்னர் குறிப்பிடாத இருபதாவது உறுப்பினர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சங்கு சின்னத்திலே போட்டிபோட்டு வந்த டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரனின் சொந்த மருமகன் அவருக்குத்தான் அந்தக் கட்சியின் பட்டியில் ஆசனத்தை ஜனா வழங்கியிருக்கின்றார்.
பல சம்பவங்கள், குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக இருக்கின்றன. ஜனா, ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் பேரவை போன்ற ஒன்று உருவாக்கியிருக்கின்றார்.
அதிலே அவர் ரெலோ கட்சி சார்பிலே செல்வம் அடைக்கலநாதனுக்குப் பதிலாக கையெழுத்திட்டிருக்கின்றார் .
இதிலே மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று நடந்த இந்தத் தெரிவிலே நாங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி சங்கு சின்னத்திலே போட்டி போட்டு வந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ரெலோ கட்சியின் ஆதரவைக் கேட்டிருந்தோம்.
அந்த வகையிலே ரெலோவின் ஆதரவை அவர் தருவதற்கு பல நிபந்தனைகளை முன்வைத்திருந்தார். அதே நேரத்திலே நாங்கள் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தேசிய அமைப்பாளர் சுரேன் குருசுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநோநோதராதலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோருடனும் பேசியிருந்தோம்.
இவர்கள் நான்கு பேரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு நாங்கள் ஆதரவு தருவோம் என்று கூறியிருந்தார்.
ஆனால் கோவிந்தன் கருணாகரன் இன்று அந்த ஆதரவை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்காமல் தேசிய மக்கள் சக்தி சார்பில் இந்த சபைக்கு முன்வைத்த தவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவாக அவருடைய சொந்த மருமகன் சொக்கன் என்று அழைக்கப்படுபவருக்கு வாக்களித்திருந்தார்.
சங்கு கட்சியில் இருந்து
அந்த வகையிலே இன்று நடந்த வாக்களிப்பிலே தவிசாளராக தேசிய மக்கள் சக்தி முன்வைத்த வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்காக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி செயற்பட்டிருக்;கின்றது.
தமிழ் மக்கள் பேரவை என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கூட்டணி இன்று எல்லா இடங்களிலும் சொல்லிக் கொண்டு வருகின்ற விடயம் தென்னிலங்கைக் கட்சிகள் வடக்கு கிழக்கிலே ஆட்சியமைக்கக் கூடாது.
அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றுடன் சேர்ந்துள்ளது.
தமிழரசுக் கட்சி நாங்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் எங்கள் தவிசாளர் வேட்பாளரை முன்நிறுத்துகின்றோம் நீங்கள் விரும்பினால் வாக்களிக்கலாம், அதிகூடிய வாக்கெடுத்த பிரதான கட்சி என்ற ரீதியில் நீங்கள் எங்களை ஆதரிக்கலாம் என்று எங்கள் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சொல்லிய போது இன்று பலர், குறிப்பாக தமிழ் மக்கள் பேரவையில் இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் எல்லாம் பல கருத்துகளைச் சொன்னார்கள்.
ஆனால் இன்று அவர்களுடன் சேர்ந்து கையுயர்த்திய கோவிந்தன் கருணாகரன் ஜனா கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், தேசிய மக்கள் சக்தியும் சேர்ந்து அவர்களின் தவிசாளர் ஒருவரை வெல்லவைப்பதற்கு தனது ஆதரவை வழங்கியிருக்கின்றார்.
ஜனாவை உடனடியாக ரெலோவின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
சங்கு கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தேசிய மக்கள் சக்தி கூட்டணியை வெற்றிப் பெறச் செய்ய செயற்பட்டீர்கள் என்று நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால் அதுதான் உண்மை என்றும் குறிப்பிட்டுள்ளார்.