வானத்தைப் போல
சன் தொலைக்காட்சியில் அண்ணன்-தங்கையின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பான சீரியல் வானத்தைப் போல.
கடந்த டிசம்பர் 2020ம் ஆண்டு முதன்முறையாக ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாக கடந்த ஆகஸ்ட் 2024ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. மொத்தம் வானத்தைப் போல சீரியல் 1146 எபிசோடுகள் வரை ஒளிபரப்பானது.

தொடர் ஆரம்பிக்கும் போது தமன் குமார் சின்ராசு கதாபாத்திரத்திலும், ஸ்வேதா கெல்கே துளசியாகவும் நடித்தனர். பின் அவர்கள் திடீரென தொடரில் இருந்து வெளியேற ஸ்ரீகுமார் சின்ராசு வேடத்திலும் மான்யா துளசி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்கள்.

பெரிய சேதம் வரப்போகிறது, குணசேகரன் வர வைத்த ஒரு நபர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
புதிய சீரியல்
கடந்த வருடம் வானத்தைப் போல சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் இதில் நடித்தவர்கள் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்போது நடிகை மான்யா கமிட்டாகியிருக்கும் தொடர் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது, சன் டிவியில் விரைவில் அன்னம், கயல், மருமகள் தொடர்களின் Triveni சங்கமம் நடக்க உள்ளதாம்.
இதில் நடிகை மான்யா சிறப்பு வேடத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது.


