மதராஸி
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர், பிஜு மேனன், விக்ராந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.


காந்தி கண்ணாடி திரை விமர்சனம்
பிசினஸ்
மதராஸி படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 125 கோடி. இதில் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரூ. 80 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆடியோ ரூ. 10 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதன்மூலம் ரிலீஸுக்கு முன் நடந்த பிசினஸில் ரூ. 90 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் திரையரங்கம் மூலம் ரூ. 35 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்தால் மட்டுமே பிரேக் ஈவன் ஆகும். அதை கண்டிப்பாக மதராஸி செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

