கல்கிசை பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் (HQI) எச்.டி.எம். துஷார உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் பொதுப்பணிகளுக்காக வைத்திய சேவைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகள்
சமீபத்தில் கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் அதிகாரிக்கும் சட்டத்தரணி ஒருவருக்கும் இடையே நடந்த வாக்குவாத விவகாரத்தை தொடர்ந்து, பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற சிறப்பு விசாரணை தொடர்பாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, முதற்கட்ட விசாரணைகளையடுத்து இந்த இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

