Dude
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் Dude.

இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இளைஞர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் சர்ச்சையில் சிக்கியது. அப்படி இருந்தும் கூட உலகளவில் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

ஜான்வி கபூருக்கு திருமணமா? ஒரு இன்ஸ்டா பதிவால் குழப்பம்
வசூல்
இந்த நிலையில், Dude திரைப்படம் உலகளவில் 7 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Dude படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 98+ கோடி வசூல் செய்துள்ளது.


