தென்னிலங்கையில் தற்போது பதிவாகி வரும் பல குற்றச் செயல்களின் பின்னணியில் பாதாள உலகக் குழுக்கள் முழுமையாக ஈடுபட்டு செயற்பட்டுள்ளமையை எம்மால் அறிந்துக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக தென்னிலங்கையில் பதிவாகி வரும் குற்றச் செயல்களுக்கு வடக்கு, கிழக்கும் உடந்தையாக இருந்துள்ளமை சற்று ஆழமாக சிந்திக்க வைத்தும் உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதில் இருந்து கடந்த அரசாங்கங்களில் திரை மறைவில் அரங்கேறிய பல விடயங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதிகாரம், அந்தஸ்த்து பாராமல் பலரும் சிறைக்கு தள்ளப்பட்டும் வருகின்றனர்.
தேர்தல் மேடைகளில் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் இன்னுமும் நிலுவையில் இருந்தாலும் கூட பாதாள உலகத்தை ஒழிப்பதற்காக அநுர அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஓரளவுக்கு சாதகமான பதிலை வழங்கி வருவதைக் காண முடிகிறது.
இந்நிலையில், தென்னிலங்கையில் இடம்பெறும் குற்றச் செயல்களின் பின்னணியில் வடக்கு, கிழக்கு பேசப்படுவதன் காரணம் தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது ஜ.பி.சி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி………
https://www.youtube.com/embed/Pjk3bHQ1_Dc

