முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவுஸ்திரேலிய முதலீட்டாளரிடம் கைவரிசையை காட்டிய இருவர் சிஐடியினாரால் அதிரடி கைது

மன்னாரில் (Mannar) அவுஸ்திரேலிய (Australia) முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (24) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய முதலீட்டாளர்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில்
பல வணிகங்களை ஆரம்பிக்க அவுஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவர் நிதி வழங்கியுள்ளார்.

அவுஸ்திரேலிய முதலீட்டாளரிடம் கைவரிசையை காட்டிய இருவர் சிஐடியினாரால் அதிரடி கைது | Mannar Duo Held For 180M Investment Fraud

இதில் நான்கு வன்பொருள் கடைகள், இரண்டு பெரிய தொன்னந்தோட்டம் ,
ஒரு பால் பண்ணை, ஒரு நெல் வயல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்
அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முதலீட்டு நடவடிக்கையில், சுமார் 180 மில்லியன் பெறுமதியான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது நடவடிக்கை

இதனடிப்படையில், சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் முதலீட்டாளரை மோசடி செய்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய முதலீட்டாளரிடம் கைவரிசையை காட்டிய இருவர் சிஐடியினாரால் அதிரடி கைது | Mannar Duo Held For 180M Investment Fraud

குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று காலை குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், சமப்வத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரும் மற்றும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகள் 

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட இரு நபர்களும் முருங்கன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முருங்கன் காவல்துறையினர், விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலிய முதலீட்டாளரிடம் கைவரிசையை காட்டிய இருவர் சிஐடியினாரால் அதிரடி கைது | Mannar Duo Held For 180M Investment Fraud

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த இரு சந்தேக நபர்களையும்
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்