முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாணக்கியன் தொடர்பில் ஈ.பி.டி.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்சவுடன் இருக்கும் போது போர்க்குற்ற விசாரணையை கேட்டிருக்க வேண்டிய
இரா.சாணக்கியன் தற்போதைய ஆட்சியாளரிடம் சர்வதேச விசாரணையை கோருவது
நகைப்புக்குரிய விடையம் என மட்டு மாவட்ட ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் வர்த்தகரான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்போது மகிந்தவிடம் கேட்டிருந்தால் அவர் நல்ல பதில்
தந்திருப்பார். எனவே இந்த “பூச்சாண்டி அரசியலை” விட்டுவிட்டு மக்களுக்கு நலன்
சார்ந்த அரசியலில் ஈடுபடுமாறும் கோரியுள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (24)
இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சாணக்கியனுக்கு எதிராக முறைப்பாடு

 நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்
முறைப்பாடு செய்ததன் காரணமாக அவர் என் மீது தொடர்ச்சியாக கடந்த 6 மாத காலமாக
பொய்யான குற்றச்சாட்டுகளை அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு
முன்வைத்து வருகிறார்.

சாணக்கியன் தொடர்பில் ஈ.பி.டி.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Epdps Allegations Against Chanakyan

 அவர் சாட்சியங்களை அச்சுறுத்துவதற்காக செயற்படுகின்றார் என்பதால் மீண்டும்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சாட்சியங்களை பாதுகாக்கும் பிரிவில் அவருக்கு
எதிராக மேலும் ஒரு முறைப்பாடு செய்துள்ளேன்.

தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் கிழக்கில் 9 எரிபொருள் நிரப்பு
நிலையங்கள் வழங்கப்பட்டும் இதில் மட்டக்களப்பில் இரண்டு இயங்கிக்
கொண்டிருக்கிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சர்ச்சை

இயங்காது இருக்கின்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்க முடியாமல் இயங்கிக்
கொண்டிருப்பதை என்னை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு நாடாளுமன்ற
உறுப்பினர்களான சிறிநாத், சாணக்கியன் ஆகிய இருவரும் சேர்ந்து அபிவிருத்தி குழு
கூட்டத்தில் இந்த இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களை பிரதேச சபைக்கு
கையளிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு கடற்றொழிலார்களின் வயிற்றில்
அடிக்க துடிக்கின்றனர். எனவே இவ்வாறு கடற்றொழிலார்களின் வயிற்றில் அடித்தால்
உங்களுக்கு எதிராக வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கடற்றொழிலார்கள் பாரிய போராட்டம்
செய்வார்கள்

நீண்டகாலமாக கடற்றொழிலார்களின் வளர்ச்சிக்கு வழங்கப்பட்டு அந்த வருமானத்தை
கடற்றொழிலார்களிடம் இருந்து பறிப்பதற்காக அபிவிருத்தி குழு கூட்டத்தில் பொய்யான
தகவல்களை வழங்கி வருவதை மீனவர் சமுதாயம் வன்மையாக கண்டிக்கின்றது.

காத்தன்குடி, கல்லாற்றில் இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்காது
இருக்கின்றது. களுவங்கேணியில் இயங்கிவரும் எரிபொருள் நிரப்பு
நிலையம் தொடர்பாக சாணக்கியன் பிழையான தகவல்களை கொடுத்து மண்ணெண்ணை விநியோகத்தை
துண்டித்துள்ளார் இதனால் நான் அவர்களுக்கு வழங்கி வந்த மாதாந்தம் 30 ஆயிரம்
ரூபா வாடகை இல்லாமல் செய்யப்பட்டதால் கடற்றொழிலார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுமுழுதாக செயலிழந்து துருப்பிடித்து பழைய
நிலைக்கு செல்லுமாகி இருந்தால் அதனுடைய பொறுப்பு அத்தனையையும் இரா.சாணக்கியன்
ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 ரணில் ஒதுக்கிய நிதி

அபிவிருத்திக்காக ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து 400 மில்லியன் பெற்றுக்
கொண்ட சாணக்கியன் இதில் 2 கோடி ரூபாவை அவரின் அப்பப்பா உடைய
இராசமாணிக்கம் அமைப்பின் கட்டிடத்தை புனரமைப்பதற்கான நிதி கோரியிருந்தார் அதை
முன்னாள் ஜனாதிபதி ரணில் பார்க்காமல் ஒதுக்கியுள்ளார்.

சாணக்கியன் தொடர்பில் ஈ.பி.டி.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Epdps Allegations Against Chanakyan

அதனை பிரதேச செயலாளர் பார்த்து மோசடி என தடுத்து நிறுத்தி விட்டார் என நான்
தகவல் அறியும் சட்டமூலம் விண்ணப்பித்து அதனை பெற்றுக் கொண்டேன் அதில் 2 கோடி
ரூபா செலவில் சாணக்கியன் இராசமாணிக்கம் அமைப்பின் கட்டிடத்தை புனர்நிர்மாணம்
செய்ய நிதியை கேட்டிருக்கின்றார் பிரதேச செயலாளர் அது ஒரு தனிப்பட்ட கட்டிடம்
அதற்கு வழங்க முடியாது என அதனை நிறுத்தி அந்த நிதியை திருப்பி அனுப்பியுள்ளார்
என பிரதி அரசாங்க அதிபர் கையொப்பமிட்ட அந்த அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே மக்கள் சிந்திக்க வேண்டும் தகவல் அறியும் சட்டம் இருக்கின்றது எவ்வாறு நிதி
ஒதுக்கப்படுகிறது யார்? யாருக்கு? எல்லாம் இந்த நிதி கொடுக்கப்பட்டது என்பதை
நீங்கள் அறிந்து கொள்ளலாம்

 தமிழ் தேசியம் பேசுகின்ற நீங்கள் இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட
ஆயிரக்கணக்கான விதவை குடும்பங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கை கால்களை
இழந்த எத்தனையோ போராளிகள் இருக்கின்றனர் அவர்களுக்கு ஏன் அந்த 2 கோடி ரூபா
பணத்தை எடுத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழங்கியிருக்கலாம்

 ஆனால் அதை செய்யாது இன்று தனிப்பட்ட முறையில் உங்கள் அப்பப்பாவின்
கட்டிடத்தை புனரமைக்க 2 கோடியை கேட்டு அது திருப்பி அனுப்பப்பட்டுள்ளது இது
மட்டக்களப்பு மக்களுக்கு நஷ்டம் எனவே இந்த நிதியை வாழ்வாதாரத்துக்காக
செய்திருந்தால் எத்தனையோ குடும்பங்கள் வாழ்வாதாரத்தில் முன்னேறி இருப்பார்கள்.

காளி கோவிலை உடைத்து மீன் சந்தை கட்டிய ஹிஸ்புல்லா

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா ஓட்டமாவடியில் காளி கோயிலை உடைத்து மீன்
சந்தை அமைத்ததாக பகிரங்கமாக தெரிவித்தார் எனவே அது சட்டவிரோதமானது என
தெரியும்தானே என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து காட்டு சட்டத்தை
கொண்டு வருகின்ற நீங்கள் அப்படியே காட்டு சட்டத்தை கொண்டு ஏன் அதற்கு
சட்டநடவடிக்கை எடுக்க தயங்குகின்றீர்கள்.

சாணக்கியன் தொடர்பில் ஈ.பி.டி.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Epdps Allegations Against Chanakyan

எனவே உங்களால் முடிந்தால் அபிவிருத்தி குழு ஊடாக நீங்கள் சட்ட நடவடிக்கை
எடுத்து மீண்டும் அந்த இடத்தில் காளி கோவிலை கட்டி பாருங்கள் உங்களுக்கு சவால்
விடுகிறேன் .

மட்டக்களப்பு  கடற்றொழிலார்கள்

அதேவேளை கடந்த 4 வருடங்களாக நாடாளுமன்றத்தில் இருக்கும் நீங்கள் மட்டக்களப்பு
மாவட்ட கடற்றொழிலார்களுக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறார்? பாலமீன்மடுவில் ஒரு
தடவையில் 300 ற்கும் மேற்பட்ட படகுகள் தரித்து நிற்கும் மீன் சந்தையை புனரமைக்குமாறு
பல தடவைகள் கடற்றொழிலார் சங்கங்கள் கடித மூலம் நிதி கோரியிருந்தனர். ஆனால்
அபிவிருத்திக்கு வந்த எந்த நிதியும் பாலமீன்மடு கிராமத்துக்கு வழங்கவில்லை

சாணக்கியன் தொடர்பில் ஈ.பி.டி.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Epdps Allegations Against Chanakyan

தற்போதைய ஆட்சியாளரிடம்; சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கோருகின்றீர்கள் இது
நகைப்புக்குரியது நீங்கள் மகிந்தவின் மடியில் தவளும்போது போர் குற்றம் செய்த
அவரிடம் விசாரணையை கேட்டிருக்க வேண்டும் அப்போது கேட்டிருந்தால் அவர் நல்ல
பதில் தந்திருப்பார் என்றார்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025

https://www.youtube.com/embed/j3kZplFqHYk

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.