முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தக்சியை வைத்து ஜே.கே.பாய் வகுத்த திட்டம் வெளிச்சத்திற்கு..!

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தி மற்றும் ஜெ.கே.பாய், யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த தக்சியை நேபாளத்திற்கு அழைந்து சென்றமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

விசாரணையில், செவ்வந்தியின் நேபாளத்தில் தயாரித்த போலி துருக்கிய கடவுச்சீட்டில் இருந்த தவறான முத்திரை காரணமாக, நேபாள குடிவரவு மற்றும் குடியேற்றத் திணைக்களத்தால் குறித்த கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டிருப்பதது கண்டறிப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து, ஜே.கே. பாய் செவ்வந்தியை போல தோற்றமளிக்கும் தக்சி என்ற பெண்ணை இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு அழைத்து வந்து மற்றொரு போலி கடவுச்சீட்டை தயாரித்ததும் தெரியவந்துள்ளது.

தப்பிச் செல்ல இருந்த நாடுகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தக்சி, இஷாரா செவ்வந்தியைப் போலவே இருந்ததால், அவர் நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரது கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு கடவுச்சீட்டை போலியாக உருவாக்கி, பின்னர் துருக்கிக்கும் பின்னர் மலேசியாவிற்கும் பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தக்சியை வைத்து ஜே.கே.பாய் வகுத்த திட்டம் வெளிச்சத்திற்கு..! | The Reason Why Jk Bhai Brought Thakshi To Nepal

இதேவேளை, விசாரணையில், செவ்வந்தி நேபாளத்தில் ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாய் ஆகியோருடன் சுமார் ஒரு மாதமாக ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும், பின்னர் அவர் வேறொரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள ஒரு அறைக்கு குடிபெயர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தப்பிய சிலோன் பாய்

அதன்பின்னரே, மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவின் பணிப்பாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட காவல் குழு நடத்திய ரகசிய விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தக்சியை வைத்து ஜே.கே.பாய் வகுத்த திட்டம் வெளிச்சத்திற்கு..! | The Reason Why Jk Bhai Brought Thakshi To Nepal

எவ்வாறாயினும், சிலோன் பாய் என்ற நபர் அங்கிருந்து வெளியேறியிருந்த நிலையில், இஷாரா செவ்வந்தி, ஜே.கே. பாய், ஜப்னா சுரேஷ், தக்சி, கம்பஹா பபா மற்றும் நுகேகொட பேபி உள்ளிட்ட சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், இஷாரா சேவ்வண்டி, ஜே.கே. பாய், ஜப்னா சுரேஷ் மற்றும் தக்சி ஆகியோர் அடங்கிய குழு கொழும்பு குற்றப்பிரிவிடமும், நுகேகொட பாபி மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவிடமும், கம்பஹா பாபி மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.