முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு

வவுனியாவின் சில கிராமங்களுக்கு இ.போ.சபை பேருந்தின் சேவை சீரின்மை தொடர்பில் கேள்வி எழுப்பிய வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நடாளுன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனுக்கும் இ.போ.சபை வவுனியா சாலை உதவி முகாமையாளருக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்ப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (31.10) செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போதே இந்த தர்க்க நிலை ஏற்பட்டது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவின் கூமாங்குளம், கள்ளிக்குளம், கந்தபுரம், வேலங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இ.போ.சபையின் பேருந்து சேவை சீராக இடம்பெறுவதில்லை எனவும்,
இதனால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் கேள்வி எழுப்பபட்டது.

கொந்தளித்த நாடாளுமன்ற உறுப்பினர்

இதற்கு பதில் அளித்த இ.போ.சபை வவுனியா சாலை உதவி முகாமையாளர்,

எமக்கு சாரதிகள், காப்பாளர்கள் பற்றாக்குறை உள்ளது. எங்களால் முடிந்தளவு நாம் செயற்படுகின்றோம். இல்லாதவிடத்து நடத்துங்கள் என்றால் எம்மால் எப்படி செயற்பட முடியும். நீங்களே எமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பேருந்து ஏன் வரவில்லை என கேட்கிறீங்கள். 

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு | Argument At Vavuniya Divisional Meeting

எங்களது இடத்தில் இருந்து பார்த்தால் எங்கள் நிலை தெரியும். விபத்து நடந்தால் நான் அந்த இடத்திற்கு போக வேண்டும். அப்போது பேருந்தை அனுப்ப சொன்னால் நான எப்படி அனுப்புவது எனத் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், அரச அதிகாரிகள் கதைக்கும் போது தெளிவாக கதைக்க வேண்டும். மக்கள் பிரதிநிதி ஒருவர் தனது தனிப்பட்ட பிரச்சினை கதைக்கவில்லை. மக்களது பிரச்சனையைத் தான் கதைக்கிறார். 

உங்கள் வேலையை விட்டு போங்கள். நான் இருந்து பார்க்கிறேன். என்ன கதைக்கிறீர்கள். கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவும். மக்களது முறைப்பாடு வரும் போது உங்களிடம் தான் கேட்க முடியும். வீதியால் செல்பவனிடம் கேட்க முடியுமா. இது உங்களது கடமை. கேட்ட கேள்விக்கு பதில் வழங்குங்கள். சரியான முறையில் பதில் அளிக்க பழகிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

நிதி ஒதுக்கீடு

இதன்போது பதில் அளித்த ஒருங்கிணைப்பு குழுர் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, மக்கள் வரிப்பணத்தில் தான் உத்தியோகத்தர்கள் சம்பளம் பெறுகிறார்கள். எங்களுக்கு தேவைப்பாடுகள் இருக்கிறது. 

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு | Argument At Vavuniya Divisional Meeting

மக்களது தேவைகள், அபிவிருத்தி தொடர்பில் இங்கு தான் கதைக்க முடியும். இதில் அமைதியாகவும், பொறுமையாகவும் கதைக்க வேண்டும். புத்திசாதுரியகமாக நடக்க வேண்டும். நாங்கள் உங்களை வரவேற்கின்றோம்.

இ.போ.சபைக்கு திறைசேரியில் இருந்து பெருமளவான பணத்தை ஒதுக்கீடு செய்கின்றோம். வவுனியா சாலை நட்டத்தில் இயங்குகின்றது. மக்கள் வரிப்பணத்தில் வவுனியா சாலைக்கும் பெருமளவு பணம் சம்பளத்திற்காக வழங்குகின்றோம். சங்கமாக கதைப்பதாக இருந்தால் வெளியில் வந்து அப்படி கதைக்க வேண்டும். 

இங்கு உள்ள பற்றாக்குறை தொடர்பில் எமக்கும் தெரியும். அது தொடர்பில் கதைப்பதானால் வெளியில் தான் கதைக்க வேண்டும். மக்களுக்கான சேவைக்காக தான் நிதி ஒதுக்கீடு செய்கின்றோம். அதற்கான சேவைவை உரிய கால அட்டவணை படி நீங்கள் செயற்பட வேண்டும், என்றார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.