கனடாவிலிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முறைப்பாடுகள் வழங்கியுள்ள நிலையில் அதற்கான பின்னணியை அவர் வெளிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
செல்வம் அடைக்கலநாதனுடையது என கூறப்படும் குரல் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், குறித்த குரல் பதிவு தொடர்பில் எந்தவொரு கருத்தும் கட்சி சார்பிலும், கட்சித் தலைமை சார்பிலும் இல்லை என்பது இங்கு முக்கியமான ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.
மக்கள் பிரதிநிதியாக, நாடாளுமன்ற உறுப்பினராக செல்வம் அடைக்கலநாதன் இவ்விடயம் தொடர்பில் மௌனம் காப்பது சிறந்தது அல்ல எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறித்த விவகாரம் உட்பட பல்வேறு முக்கியான விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…
https://www.youtube.com/embed/8LRQa2BRtkc

