அரச ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆதனக் கடன் திட்டத்தினை ரூபா 50 இலட்சம் வரை வழங்குவதற்கான புதியதொரு கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கடன் திட்டம்
இந்தவிடயத்தில் ஆரம்ப ரூபா 30 இலட்சம் வரை 4 சதவீத வட்டிச் சலுகையிலும், ரூபா 30 இலட்சத்தில் இருந்து ரூபா 50 இலட்சம் வரை 2 சதவீத வட்டிச் சலுகையிலும் கடன்களை வழங்குவதற்கு 500 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

