இலங்கை மத்திய வங்கி வாகன குத்தகை வசதிகளுக்கு பொருந்தக்கூடிய அதிகபட்ச கடன்-மதிப்பு (LTV) விகிதங்களை திருத்தியுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, வணிக வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை சதவீதம் 70% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தனியார் வாகனங்களுக்ககு 50% ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், மத்திய வங்கி நான்கு தனித்தனி LTV வகைகளை அறிவித்ததிருந்தது.
தற்போதைய திருத்தம்
அதன்போது, வணிக வாகனங்களுக்கு 80%, தனியார் வாகனங்களுக்கு 60%, முச்சக்கர வண்டிகளுக்கு 50% மற்றும் பிற வாகனங்களுக்கு 70% என வகைப்படுத்தப்பட்டிருந்தன.

சமீபத்திய திருத்தத்தின் கீழ், இவை இப்போது இரண்டு முக்கிய வகைகளாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வணிக வாகனங்கள்: அதிகபட்ச குத்தகை வசதி 70% வரை மற்றும் தனியார் வாகனங்கள் (கார்கள், வான்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பிற தனியார் பயன்பாட்டு வாகனங்கள்): அதிகபட்ச குத்தகை வசதி 50% வரை தற்போது திருத்தியடைக்கப்பட்டுள்ளன.



