திருகோணமலையில் சட்டத்திற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்
சி.கோலகேஸ்வரன் (17.11.05) இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தமிழர்களின் வரலாற்றுதொன்மை மிகுந்த பூர்வீக நிலமாகவும் இராவணன் உடைய வரலாற்று
பின்னணிகளை கொண்ட நிலமாக திருகோணமலை காணப்படுகின்றது.
சிங்கள பௌத்த பூமி
காலத்திற்கு காலம்
ஆட்சியில் ஏறுகின்ற அரசாங்கம் திருகோணமலையினை சிங்கள பௌத்த பூமியாக
மாற்றுகின்ற வேலைத்திட்டத்தினைத்தான் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

திருகோணமலையினை ஒரு பௌத்த சிங்கள பிரதேசமாக வெளிப்படுத்துவன் மூலம்
வடக்கினையும் கிழக்கினையும் பிரிப்பதும் தமிழர்களின் தாயகம் இல்லை என்ற
வேலைத்திட்டத்தினை உருவாக்குகின்ற ஒரு வேலைத்திட்டத்தினை தொடர்ச்சியாக
ஆட்சிபீடத்தில் ஏறுகின்ற அரசுகள் இதே கொள்கையினை கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.
அவ்வாறுதான் நேற்று எதுவித அனுமதியும் பெறாமல் புத்தர் சிலை அமைக்கப்பட்டது
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் பொதுபாதுகாப்பு அமைச்சரிடம்
தெரிவித்தமைக்கு இணங்க அந்த சிலை அப்புறப்படுத்தப்பட்டது.
இன்று மீண்டும் அந்த
சிலை அந்த பிரதேசத்தில் புத்தர் சிலைநிறுவப்பட்டுள்ளது
உண்மையில் இன்று ஆட்சியில் உள்ள அரசாங்கமும் இனவாத போக்கினைத்தான்
கடைப்பிடிக்கின்றார்களா?இனவாத அரசியலைத்தான் முன்னெடுக்கின்றார்களா என்ற
கேள்வி எழுகின்றது.
மகாவம்ச மனநிலை
உண்மையில் சிங்கள பௌத்தர்கள் இல்லாத ஒரு பிரதேசத்தில்
அடாவடித்தனத்தின் அடிப்படையில் சிங்கள பௌத்த குருமார்கள் புடைசூழ பௌத்தத்தினை
கேவலப்படுத்தும் அடிப்படையில் ஒரு புத்தர் சிலை அரச இயந்திரத்தின்
பாதுகாப்புடன் நிறுவப்பட்டிருக்கின்றது என்பது இந்த தேசத்தில் மிகமோசமான இனவாத
சூழ்நிலையினை வெளிப்படுத்தி இருக்கின்றது.

இந்த தேசம் தொடர்ச்சியாக அபிவிருத்தியினை நோக்கி நகரமுடியாமல் இருக்கின்ற மூல
காரணம் காக்கிச்சட்டை அணிந்த பௌத்த சிங்கள மதத்தலைவர்களின் மகாவம்ச மனநிலை
என்பது தொடர்ச்சியாக நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது.
திருகோணமலையில் இடம்பெற்ற இந்தசம்பவம் இரண்டு இனங்களுக்கிடையில் அல்லது
மதங்களுக்கிடையில் ஒரு முரண் நிலையினை உருவாக்கும் சம்பவம் எனவே அரசாங்கம்
இந்த விடையத்தில் கவனம் செலுத்தி முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த
சின்றம் அப்புறப்படுத்தப்பட்டு பிரதேசம் சமதான சூழ்நிலையினை உருவாக்கும்
பிரதேசமாக மாற்றி அமைக்கப்படவேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.

