அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் விவசாய நிலங்கள்
மற்றும் வயல் வெளிகளில் குவிந்துள்ள மணலை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு
கட்டாயமாக அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் என்று புவிசரிதவியல் மற்றும்
சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
அனுமதிப்பத்திரம்
எனினும், இந்த மணலை அகழ்ந்தெடுக்கும் நடவடிக்கைக்கு அனுமதிப்பத்திரம் பெறுவது
அவசியமில்லை என்று பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன்
தெரிவித்துள்ளார்.

வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரக் கட்டணம்
அரசாங்கத்தால் அறவிடப்படுவதுடன், இந்த வருமானம் அரச பங்காகக் கருதப்பட்டு
திறைசேரிக்கு அனுப்பப்படும்.
சாதாரண சூழ்நிலைகளில் மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்து இரண்டிற்கும்
அனுமதிப்பத்திரம் தேவைப்படும் நிலையில், அனர்த்த கால சூழ்நிலை காரணமாக
அகழ்வுக்கான கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

