உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் இணைந்து A9வீதியில் கரடிப்போக்கு சந்தியிலிருந்து இரணைமடு சந்தி வரை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட பிளாஸ்டிக்கழிவுகள் அகற்றப்பட்டன.குறித்த சிரமதானப்பணியில் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் ,பதவிநிலை உத்தியோகத்தர்கள் ,கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர , சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கம்மன ,கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.

