முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சமூக நலனை முன்னிறுத்தியே மக்கள் காங்கிரஸ் முடிவெடுக்கும்: ரிஷாட் உறுதி

சமூகங்களின் நலனை முன்னிறுத்தியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொருத்தமான
முடிவொன்றினை மேற்கொள்ளுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Pathiudeen) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது
தொடர்பில், கடந்த 10,11,12ஆகிய தினங்களில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற,
மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் கலந்துரையாடல்களின் போதே அவர்
மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “தலைமையுடன் நட்பையும் உறவுகளையும் கொண்டிருப்பதைக் காரணமாக வைத்து எந்தவொரு
ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க முடியாது.

மக்களின் கருத்து

சுமார் நான்கரை வருடகால
ஆட்சியில் நமது சமூகம் எதிர்கொண்ட இன்னல்களை நாம் மறந்துவிட முடியாது.
அதேபோன்று, எதிர்க்கட்சியில் நாம் இருந்தவேளை, கட்சியின் ஆதரவாளர்களுக்கும்
தலைமைக்கும் ஏற்படுத்திய துன்பங்கள் மறக்கமுடியாதவை.

சமூக நலனை முன்னிறுத்தியே மக்கள் காங்கிரஸ் முடிவெடுக்கும்: ரிஷாட் உறுதி | Rishad Bathiudeen On 2024 Presidential Support

கொழும்பிலே தலைமையும் கட்சியும் முடிவெடுத்த பின்னர், மக்களிடம் வந்து ‘இந்த
வேட்பாளரைத்தான் ஆதரியுங்கள்’ என்று நாம் கூறவில்லை. இதற்கு மாற்றமாக மக்களின்
கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், ஆலோசனையின் அடிப்படையில் நாம் முடிவுகளை
மேற்கொள்வோம். இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கு எந்த வேட்பாளர்
வித்திடுகின்றாரோ, அவரை நாம் தெரிவுசெய்ய உழைப்போம்.

இனவாதத்தைத் தூண்டி அதில் குளிர்காய நினைப்போரை அடக்குவதற்கான முறையான
சட்டங்களை உருவாக்கும் ஆட்சியாளரையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவொரு
இக்கட்டான சூழலாகவும் வித்தியாசமான தேர்தலாகவும் இருப்பதனால், நாம் தீர்க்கமான
முடிவை மேற்கொள்வதே பொருத்தமானது.

எதிர்காலத் தலைமை

நாட்டின் பொருளாதாரத்தை சீரிய முறையில் முன்கொண்டு செல்பவராகவும் கைத்தொழில்
மேம்பாட்டில் அக்கறைகொண்டவராகவும் நாட்டின் எதிர்காலத் தலைவர் இருக்க
வேண்டும். அத்துடன், முறையான வெளிநாட்டுக்கொள்கையை அவர் பின்பற்ற வேண்டும்.

சமூக நலனை முன்னிறுத்தியே மக்கள் காங்கிரஸ் முடிவெடுக்கும்: ரிஷாட் உறுதி | Rishad Bathiudeen On 2024 Presidential Support

பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டுமென்ற கோட்பாட்டையும்
எதிர்காலத் தலைமை மேற்கொள்ள வேண்டும். இவற்றைதான் நமது கட்சி முன்வைக்கிறது.

அதுமட்டுமின்றி வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும்
இழுத்தடித்துக்கொண்டிராமல், இதனை முடிவுக்குக்கொண்டுவரும் ஒருவரை நாம்
அடையாளப்படுத்துவது இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமானது. இறைவன் மீது
நம்பிக்கைகொண்டு, நாம் பொருத்தமான முடிவொன்றை எடுப்போம்” என  உறுதியளித்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.