முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பெண்ணொருவருக்கு நடந்துள்ள கொடூரம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று  தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரின் தாய் தந்தையர் உயிரிழந்ததை அடுத்து, குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் , பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

போதைப் பொருள்

சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த வேளை ஐனவரி மாதம் சகோதரன் வீட்டில் ஆட்களற்ற வேளை உள்நுழைந்த கும்பல் ஒன்று போதைப் பொருளை வழங்கி, அதனை பலாத்காரமாக நுகர வைத்து, அடித்து துன்புறுத்தி தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளனர்.

யாழில் பெண்ணொருவருக்கு நடந்துள்ள கொடூரம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர் | Woman Is Gang Raped Jaffna Police Investigation

தொடர்ந்து வந்த நாட்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் குறித்த பெண் தங்கி நின்ற வேளை அங்கும் குறித்த கும்பல் சென்று, பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி, தாக்கி தவறான முறைக்குட்படுத்தியுள்ளனர்.

10 பேரை உள்ளடக்கிய கும்பல்

இதில் காயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

யாழில் பெண்ணொருவருக்கு நடந்துள்ள கொடூரம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர் | Woman Is Gang Raped Jaffna Police Investigation

அதன்போது குறித்த பெண் ஜனவரி மாதம் முதல் பல்வேறு தடவைகள் 10 பேரை உள்ளடக்கிய கும்பல் போதைப் பொருளை கட்டாயப்படுத்தி நுகர வைத்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்து, தன்னை தவறான முறைக்கு உட்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெண்ணின் வாக்குமூலத்தை முறைப்பாடாக பதிவு செய்துள்ள பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Source: https://ibctamil.com/article/woman-is-gang-raped-jaffna-police-investigation-1713879971?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.