நடந்து முடிந்த 2024ஆம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வெளியில் கசிந்த மூன்று வினாக்களுக்கும் முழு புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றமில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நடத்தப்பட்ட பரீட்சையே நிலையானது
மேலும், நடத்தப்பட்ட பரீட்சையே நிலையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குள்ளான குறித்த மூன்று கேள்விகளுக்கும் முழுமையான புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமானது, நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-2024-1727703576

